Bitter Berry Book Release Slideshow: SHADAGOPAN’s trip to Colombo, Sri Lanka was created by TripAdvisor. See another Colombo slideshow. Create a free slideshow with music from your travel photos.

Saturday, November 9, 2013


தமிழகத்தில் இலக்கிய விருதுபெறும் மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மல்லியப்பூ சந்தி திலகர்

தெளிவத்தை ஜோசப்
இலங்கை நாடானது கிராமிய பொருளாதார முறைமையில் இருந்து பெருந்தோட்ட பொருளாதார முறைக்கு கால் பதித்து கோப்பிதேயிலை பயிர்செய்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியவுடன் பொருளதாரத்தில் மாத்திரமின்றி சமூகக் பண்பாட்டு கலை இலக்கிய கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அந்தவகையில் ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சேர்ந்தனர்பச்சை வனங்களை பசுந்தளிர்கோப்பிதேயிலை பயிர் நிலங்களாக மாற்றிய பெருமை இம் மக்களையே சாரும்.

வனப்பு மிக்க இலங்கையின் வளமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான துன்கிந்தை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பல தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் ஊவா கட்டவளை எனும் தோட்டத்தில் அந்த தோட்டத்துக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்த சந்தனசாமி ஆசிரியருக்கும் பரிபு+ரணம் அம்மையாருக்கும் 1934 ம் ஆண்டு மகனாக பிறந்தவர் ஜோசப்.

ஊவா கட்டவளை தோட்டத்துப் பள்ளியில் தனது தந்தையையே குருவாகக் கொண்டு கல்வியை ஆரம்பித்தவர் சிலகாலம் தமிழகத்திலும் பின்னர் பதுளை பீட்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்திருக்கிறார்.

கத்தோலிக்க இறைபக்தி நிறைந்த குடும்ப பின்னணியோடு இல்லறத்தில் பிளோமினா அவர்களை கரம்பிடித்திருக்கும் இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்இன்றும் கொழும்பில் தனியாரர் நிறுவனம் ஒன்றிற்கு கணக்காளராக தொழிலுக்கு புறப்பட்டு விடும் இவர்இலங்கையின் சாமான்ய பிரஜைகளில் ஒருவர்சக மனிதர்களோடு சக மனிதனாக சகஜமாக வாழ்ந்துவரும் இவர் பொதுப் போக்குவரத்தில் சக பயணியாக மக்களோடு மக்களாக வாழ்க்கை பயணத்தில் இணைந்திருப்பவர்.

இவர் நாளாந்த வாழ்வில் மக்களோடு பழகுகின்ற தன்மையும்அவரது சமூக பிரக்ஞையும்,சமூகம் நோக்கிய அவரது வித்தியாசமான பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு வித்தியாசத்தன்மையையும் யதார்த்தத்தையும் கொண்டுவந்து விடுகின்றது.

மக்களின் வாழ்க்கையை தமது எழுத்துக்களின் ஊடாக படைப்பாக்கம் செய்யும் செழுமைப் பெற்றவர் ஜோசப். அவரது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் சமூக வாழ்வின் பலவேறு நுணுக்கங்களையும் வெளிக் கொணர்ந்திருப்பவர்.

எப்போதும் தேடல் மிகுந்த இவரது வாசிப்புப் பழக்கம் இவரது வீட்டினை ஒரு வாசிகசாலையாகவும்பலநூறு புத்தகங்களைக்கொண்ட ஒரு நூலகமாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றது.


1963 இல் பதுளை தெளிவத்தை எனும் தோட்டத்தில் ஆசிரியராகவும் பகுதி நேர எழுதுவினைஞராகவும் தொழில் தொடங்கியவர் அப்போதே தமிழகத்தில் இருந்து வெளிவந்தஉமா’ ‘பேசும் படம்” கொழும்பில் இருந்து வெளிவந்த கதம்பம்’ ஆகிய இதழ்களுக்கு எழுதிதெளிவத்தை ஜோசப்’ எனும் இலக்கிய பெயருக்கு சொந்தகாரரானார்.


1963 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை நடாத்திய மலையக சிறுகதை போட்டியில் பாட்டி சொன்ன கதை’ என்ற கதையின் ஊடாக தன்னை அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர்தனது மனைவியின் பிளோமினா என்ற பெயரிலும்தமது பிள்ளைகளான,திரேசாசியாமளாரவீந்திரன்ரமேஸ்போன்ற பெயர்களிலும் ஜேயார்ஜோரு என்கின்ற புனைப் பெயர்களிலும் சிறுகதைநாவல்இலக்கிய கட்டுரைகள்ஆய்வுக்கட்டுரைகள்வானொலி நாடகங்கள்தொலைக்காட்சி நாடகங்கள்திரைப்பட வசனம் என பல்வேறு தளங்களிலும் தனது இலக்கிய ஆளுமையை பதிவு செய்திருப்பவர்.

 இலங்கையில் உருவான புதிய காற்று’ என்ற திரைப்படம் இவரது திரைக்கதை வசனத்தோடு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலினால் அல்லகாலங்கள் சாவதில்லைநாமிருக்கும்நாடேபாலாயிமலையக சிறுகதை வரலாறுகுடை நிழல்நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாறு என பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார்கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சஞ்சிகைகள்பத்திரிகைகளில் அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

மலையக சிறுகதை வரலாறுதுரைவி தினகரன் சிறுகதைகள்உழைக்கப்பிறந்தவர்கள் போன்ற படைப்புக்களின் ஊடாக மலையக இலக்கிய வரலாற்றை பதிவு செய்துள்ளார்சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் எனும் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.


இங்கிலாந்துஅவுஸ்திரேலியாகனடாசிங்கப்பு+ர்என பல வெளிநாடுகளும் இவரை அழைத்து கௌரவித்திருப்பது இலங்கைமலையக இலக்கியத்துக்கு கிடைத்த பெரும் கௌரவமாகவே அமைகிறது.

இலங்கையில் வெளிவரும் இலக்கிய இதழ்களான மல்லிகைஞானம் ஆகியன தனது அட்டைப்படத்தில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பதிப்பித்து கௌரவம் செய்திருக்கினறன.

அடிப்படையில் கணக்காளர் என்ற தொழிலின் ஊடகவே தனது வாழ்க்கையை நடாத்திவரும் இவர் இலக்கிய வேட்கையோடு ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும்இவர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்து தனது அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்இவரது படைப்புகள் குறித்து இலங்கையிலும் தமிழகத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.


தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை வென்றவர்.இலங்கை அரச சாகித்திய விருதுகலாபு+சணம் விருதுதேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய விருதுகம்பன் கழக இலக்கிய விருது ஆகியவற்றோடு 2008 ம் ஆண்டு எழுத்தாளர்ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் பெற்றவர்.

அத்தோடுமலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001 ம் ஆண்டு பண்டிதமணி சி.கணபதிபிள்ளை நினைவாக வழங்கப்படும் உயர் விருதான சம்பந்தன்’ விருதினை பெற்றுக்கொண்ட முதல் மலையக எழுத்தாளர் என்ற பெருமை பெற்றவர்தனது குடை நிழல்என்ற நாவலுக்காக தென்னிந்தியாவின் சுபமங்களா பரிசினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவரது இலக்கிய சேவையை கௌரவித்து பேராதனை பல்கலைக்கழகம் 2007 ம் ஆண்டு உயர் விருதினை வழங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு கொடகே நிறுவனம் வழங்கும் வாழ்நாள் சாதனையார் விருதும், 2013 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழக தமிழச்சங்க விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் பிரபலம் பெற்ற படைப்பானவிஷ்ணுபுரம்’ பெயரில் நிறுவப்பெற்றுள்ள விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ இந்த (2013)ஆண்டுக்கான இலக்கிய விருதினை தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அறிவித்துள்ளது. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இம்முறை தமிழகத்தில் வழங்கப்படவுள்ள விஷ்ணுபுரம்விருதினை இதற்கு முன்னர் அ.மாதவன்பு+மணி மற்றும் கவிஞர் தேவதேவன் ஆகிய இந்திய எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லட்சம் இந்திய ரூபாவுடன் நினைவுச்சிற்பமும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும்2013 டிசம்பர் மாதம் 22ம் திகதி தமிழ்நாடுகோயம்புத்தூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்திரா பார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பற்றிய சிறு கைநூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இதனை மலையாளக் கவிஞர்பாலச்சந்திரன் வெளியிட்டு வைக்கவுள்ளார்அத்துடன் எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், ‘வெயில்’ திரைப்படப் புகழ் இயக்குனர் வசந்தபாலன் ஆகியோரும் விழாவில் உரையாற்றவுள்ளனர்.

கொடகே நிறுவனத்தினரால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய தமிழகத்தின் சுபமங்களா’ பரிசு பெற்ற குடைநிழல்’ நாவல்மதுரை எழுத்துபதிப்பகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு மேற்படி விழாவில் வெளியிடப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

தலாத்துஓயா கே.கணேஷ் அவர்களுக்கு கனடா நாட்டில் வழங்கப்பட்ட தமிழியல் விருதுக்கு அடுத்ததாக இலங்கைக்கு வெளியே இலக்கிய விருது பெறும் மலையக எழுத்தாளராக தெளிவத்தை ஜோசப் அவர்கள் திகழ்கிறார்.

No comments:

Post a Comment